கார் விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி பலி.

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி உயிரிழந்தார்.
அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யபிரியாவுக்கும், மதுரையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கார்த்திக் ராஜா, திவ்யபிரியா மற்றும் அவரது உறவினர்கள் என ஐந்து பேர் உதகைக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
பின்னர் மீண்டும் மதுரையை நோக்கி புறப்பட்ட போது காரை பார்த்திபன் என்பவர் இயக்கினார். கல்லார் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் திவ்யபிரியா உட்பட 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மருத்துவரும்,திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியுமான திவ்யபிரியா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.காரின் பிரேக் திடீரென பிடிக்கவில்லை என கூறப்படும் நிலையில், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி பலி.