சாலையில் கிடந்த ஏகே 47 ரக துப்பாக்கி.. அதிர்ந்துபோன போலீஸ்

சென்னை ராமாபுரத்தில் மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் சாலையில் கிடந்துள்ளனர். அதனை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கரையான்சாவடி CRPF கேம்பில் இருந்து ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்காக சென்ற வீரர் சாலையில் துப்பாக்கியை தவறவிட்டதாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் வந்து ஏகே 47 ரக துப்பாக்கியை பெற்றுக் கொள்ளுமாறு வீரருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags :