இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி வைக்க முயற்சி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் படுக்கை அறையில் உளவு பார்க்கும் கருவி வைக்க முயன்ற பாதுகாப்பு ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .முன்கூட்டியே இம்ரான்கான் பாதுகாப்பு ஊழியர்களின் பட்டியலை அளித்திருந்தால் அவர்களின் பின்னணியை விசாரித்து இருக்க முடியும் என்று இஸ்லாமபாத் போலீசார் தெரிவித்தனர். பலமுறை கேட்டும் இம்ரான்கான் தமது பாதுகாவலரின் பட்டியலை தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டஆஷிர் என்ற பாதுகாப்பு ஊழியர் பாதுகாவலர் அடித்து சித்திரவதை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Tags :














.jpg)




