இஸ்ரேல் -கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்த்தி கையெழுத்தானது

by Admin / 14-10-2025 02:02:06am
இஸ்ரேல் -கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்த்தி கையெழுத்தானது

காசா போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகள் பரிமாற்ற  ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2000 பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் கைதிகளுக்கு ஈடாக ஹமாஸ் 20 உயிருள்ள இஸ்ரேலிய பயணக் கைதிகளையும் விடுவித்துள்ளது.

இஸ்ரேல் -கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்து,, கத்தார், அமெரிக்கா மற்றும் துருக்கி  முன்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே கிட்டத்தட்ட இரண்டு வருட கால போரை முடிவுக்கு கொண்டு வந்தது. அக்டோபர் 13, 2025 அன்று எகிப்தில்  நடந்த ஒரு உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம் உள்ளிட்ட உலக தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்து இட்டனர். காசா போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகள் பரிமாற்ற  ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2000 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக ஹமாஸ் 20 உயிருள்ள இஸ்ரேலிய பயணக் கைதிகளையும் விடுவித்துள்ளது..

.இந்த ஒப்பந்தத்தின் படி உடனடியாக ,

போர் நிறுத்தும்

இஸ்ரேல் படைகளை காசாவில் இருந்து படிப்படியாக வெளியேற்றுதல்

பணியக் கைதிகளை விடுவிப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது...

காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் தடை இன்றி செல்வதற்கு ஏதுவான வழித்தடங்களை திறப்பது

காசா மறு சீரமைப்புக்கான வழிமுறைகள் வெசேட் பேங்க் மற்றும் காசா இடையே முழுமையான ஒருமைப்பாட்டை நிறுவுவதற்கான பேச்சு வார்த்தைகளை தொடங்குதல் ஆகியவை அடங்கும்

. இந்த ஒப்பந்தம் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த எகிப்து உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் காசாவில் தங்கியிருந்து மேற்பார்வை இடுவர். இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மற்றும் கமாஸ் ஆகிய இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு வலியுறுத்தி அவர் ஒப்பந்தத்தை  அதிபா் டொனால்ட் ட்ரம்ப் எகிப்திற்கு பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஒரு புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் என்று பாராட்டியுள்ளார் .

 

Tags :

Share via