அறநிலையத்துறையை அதிரவிட்ட நீதிபதி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நிலத்தில் செயல்படும் பூம்புகார் கப்பல் கழகம் ரூ.3 கோடிவரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் 80 லட்சம் மட்டும் பாக்கி இருப்பதாகவும், அந்த நிறுவனம் கால அவகாசம் கேட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஏழை வியாபாரி வாடகை செலுத்தவில்லை என்றால் ஆக்கிரமிப்பாளர் என கூறும் நீங்கள் பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :