செல்லூர் ராஜூக்கு அண்ணாமலை பதில்
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரிய செல்லூர் ராஜூக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நான் எப்படி அறிவிக்க முடியும்?; தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு தலைவராக இருக்கிறேன்” என பதிலளித்துள்ளார். மேலும், எனது அரசியல் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். தமிழக பாஜகவுக்கும் சரி எனக்கும் சரி அதிமுகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை. அதே வேளையில் மத்தியில் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என தெரிவித்துள்ளார்.
Tags :