பெண் பிணத்திடம் நகை திருடிய வார்டு பாய்.

உத்தரப் பிரதேசம்: அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணிடமிருந்து நகைகளை திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளது. ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்பவரின் மனைவி ஸ்வேதா(26), விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கிருந்த வார்டு பாய் விஜய் என்பவர், இறந்த பெண்ணின் காதணியை நைசாக திருடியுள்ளார். நகையை காணவில்லை பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விஜய்யை கைது செய்தனர்.
Tags :