திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருநாள் என்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் தமிழர் பாரம்பரிய முறையாகும் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசு பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்த ஆண்டு முதல் மீண்டும் தங்களது பாரம்பரிய முறைப்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மாலையில் தீபம் ஏற்றுவது தமிழர்களின் பாரம்பரியம் என்றும் தீபத்தூனின் நோக்கமே தீபம் ஏற்றுவது தான் என்றும் நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இந்த தீபத்தூணானது தர்கா வளாகத்திற்கு சொந்தமான பகுதியில் இல்லை என்றும் அங்கு தீபம் ஏற்றுவதால் தற்கா அல்லது முஸ்லிம்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. மாறாக, தீபம் ஏற்ற அனுமதிக்க படாவிட்டால் கோவிலின் உரிமைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்களின் அடிப்படையில் தீபத்தூணில் தீபம் ஏற்றவும் அதற்கு தேவையான முழு பாதுகாப்பை வழங்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு பாரம்பரிய முறை மீண்டும் நடைமுறைப்படுத்த ப்படுகிறது. இத்தீா்ப்புக்குஎதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Tags :



















