சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

by Admin / 14-03-2022 10:55:52am
 சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வருபவர்  அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன். 

இவர் இரவு விடுதியின் வரவேற்பறையில் தூங்கிவிட்டு காலை எழுந்து பார்த்த போது அவரது செல்போஃன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது விடுதியின் உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் வரவேற்பறையில் வந்தவுடன் தான அனிந்திருந்த டி-ஷர்ட்டை கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு தனது விலை உயர்ந்த செல்போஃனை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து  இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் ஐயனார் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் விசாரணை மேற்கொண்டதில் .

அதே பகுதியில் தங்கி இருக்கும் பண்ருட்டியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo