மாணவி ஸ்ரீமதிமணி மண்டபம் நாளை திறப்பு.

by Editor / 11-07-2023 11:30:50pm
மாணவி ஸ்ரீமதிமணி மண்டபம் நாளை திறப்பு. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில்  நாளை மணி மண்டபம் திறக்க உள்ளது. உன்னோடு சேர்ந்து நீதியும் உள்ளே புதைந்து உள்ளது.. என்ற வாசகம் மணி மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில்  உயிர் இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில் இது சம்பந்தமான வழக்கு  நடைபெற்று வரும் நிலையிலும் பெரிய நெசலூர் கிராமத்தில்  முதலாம் ஆண்டு நினைவஞ்சலியுல் ஸ்ரீமதியின் மணி மண்டபம் மயானத்தில்  அமைத்து நாளை திறக்கப்பட உள்ளது. மாணவி ஸ்ரீமதிமணி மண்டபம் நாளை திறப்பு.
 

Tags :

Share via

More stories