கேரளாவில் ஆற்றுக்கால் விழா -லட்சக்கணக்கில் திரண்ட பெண்கள்

by Staff / 25-02-2024 04:17:46pm
கேரளாவில் ஆற்றுக்கால் விழா -லட்சக்கணக்கில் திரண்ட பெண்கள்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள்கள் திருவிழாவின் இறுதிநாளான இன்று பொங்கல் வைபவம் தொடங்கியது. பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் திருவனந்தபுரத்தில் திரண்டு சாலைகளில் வழிநெடுக பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

 

Tags :

Share via