by Staff /
13-07-2023
01:00:46pm
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரிய மனு மீதான குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 24 அன்று, பிரதமர் மோடி பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டின் பேரில் குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததது. தொடர்ந்து அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Tags :
Share via