10-ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் விநியோகம் 

by Editor / 09-05-2021 05:42:44pm
10-ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் விநியோகம் 



 தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதுடன், முதற்கட்டமாக 2000-ரூபாய்10-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 4,153.39 கோடி ரூபாய் செலவு தமிழக அரசுக்கு ஏற்படும்.
10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும் வீடு, வீடாக டோக்கன் அளிக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அத்துடன் டோக்கன் முறையாக தரப்படுகிறதா? என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் தயார் நிலையில் உள்ளது. இதில் கடையின் பெயர், அட்டை தாரரின் பெயர், நிதியுதவி அளிக்கும் நாள், தேதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம், தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்போம் என்று குறிப்பிட்டு தமிழக முதலைமைச்சர் என்று அச்சிடப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் புகைப்படம், அமைச்சர்கள் புகைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் எந்த புகைப்படமும் இல்லாதது சிறப்பு என வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.

 

Tags :

Share via