கொரோனா கட்டளை மையத்திற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.
கொரோனா கட்டளை மையத்திற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நாளை முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா கட்டளை மையத்திற்கு 6 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கொரோனா கட்டளை மையத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து, அழகு மீனா, உமா, நந்தகுமார், வினித், கார்த்திகேயன் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா கட்டளை மையம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை விவரங்களை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















