21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

by Editor / 12-12-2024 08:48:26am
21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

21 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருப்பத்தூர், தூத்துக்குடி, வேலூர், கரூர், திருவள்ளூர், நெல்லை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஆகும். நாகூர் தர்கா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையிலும், கனமழையால் தி.மலை, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Share via