பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் 543 பேருக்கு மேல் கொண்டு வருவது தமிழ்நாட்டை ஏன் தென் மாநிலங்களை அதிகம் பாதிக்கும்
இன்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தொகுதி மறு வரையறை சட்ட மசோதா குறித்த விவாதம் காரசாரமாக நிகழ்ந்தது. தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் 39 இருக்கும் நிலையில் அதை 50% கூட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்கிற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் ,பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் 543 பேருக்கு மேல் கொண்டு வருவது தமிழ்நாட்டை ஏன் தென் மாநிலங்களை அதிகம் பாதிக்கும் என்றும் 1971 க்கு பின்னால் ஏற்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடிப்படையிலேயே தான் தொகுதி இருக்க வேண்டும் என்றும் அதாவது 7. 18 அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் மக்கள் தொகையை தென் மாநிலங்கள் கட்டுப்படுத்திய நிலையில் மக்கள் தொகையில் அடிப்படையில் தொகுதி வரையறு செய்தால் தமிழகம் , கேரளம் ,கன்னடம் ,ஆந்திரா ,தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அதிகமான தொகுதி தமிழகத்திற்கு கிடைக்கும் என்று சொல்வது பாஜக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற ரீதியிலும் எதிர் அணியினர் கருத்துக்களை முன் வைத்தனர். இங்கே 50 தொகுதிகள் கூடும் பொழுது வடஇந்திய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் அதிகரிக்கப்படும் பொழுது தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலை ஏற்படும் என்கிற கருத்து முன் வைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசுக்கு திமுகஅழுத்தம் கொடுத்ததனால் மேலும் 25 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அதேபோன்று இந்த காலகட்டத்திலும் செய்திகள் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 543 தொகுதிகள் மட்டுமே இருக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொன்னார் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ச்சனா அரசின் நிலைப்பாடும் இதுதான் என்கிற உறுதிபாட்டை வெளிப்படுத்தினார். பாஜக பாமக உறுப்பினர்கள் தொகுதி மறுவறைக்கு ஆதரவாக பேசினர்.
Tags :


















