நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் வானதி சீனிவாசன்

by Staff / 03-02-2024 05:39:15pm
நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கோவையில் பாஜகவின் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. ஹரியானாவின் சிர்சா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சுனிதா துக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாளை நீலகிரி தொகுதியின் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதுபோல வரும் தேர்தலுக்கு மகளிர் அணியினை தயார் செய்யும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மகளிர் அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம் அரசியலில் மகளிரின் பங்களிப்பு மேம்படுத்தப்படுவதோடு, அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அதிக அளவில் மகளிர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என காட்சிக்கு வலியுறுத்தியுள்ளோம். அதற்கான தகுதியான மகளிரை தேர்வு செய்தும் வருகிறோம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி. கே. வாசன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார். கட்சி சார்பில் யாரை தூதாக அனுப்புகிறார்கள் என்பது கட்சிக்கு தான் தெரியும் எங்களால் கருத்து கூற முடியாது. அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு பணி செய்வதற்காக அரசியல் களத்திற்கு வருவதாக கூறுகிறார். அவரை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories