மெரினா கடற்கரை சாலையில் மீன் கடை அகற்ற மீன் வியாபாரிகள் கொந்தளிப்பு

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினபாக்கம் வரை உள்ள லூப் சாலையில் மீன் கடைகள், சின்ன சின்ன மீன் உணவகங்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதாகவும் வாகனங்கள் சாலைகளின் நிறுத்துவதாலும் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது .இவ் வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ் என் சுந்தர், பி பி பாலாஜி ஆகியோர் மெரினா கடற்கரை சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதமான மீன் கடைகள் சிறு உணவுகள் செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பொதுச்சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் இதில் எந்த சமரசரத்திற்கும் இடமில்லை என்றும் சாலைகளில் மீன் கழிவு நீர் கொட்டுவதற்கு ஆனா இடமா என்றும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியதோடு வரும் 18ஆம் தேதிக்குள் மாநகராட்சி லூப்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் .அதனை தொடர்ந்து இன்று லூப் சாலை மேற்பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள, இதற்கு அங்கே மீன் கடைகள் சின்ன மீன் உணவகங்கள் வைத்திருப்போர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மாநகராட்சி ஊழியர்களுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மீன்களை சாலைகளில் வீசியும் மாநகராட்சி ஊழியர்களோடு சண்டையிட்டன. மாநகராட்சி ஊழியர்கள் இது நீதிமன்ற உத்தரவு என்று கூறி அங்கு இருக்கக்கூடிய பொருள்களை அகற்றினர்.
Tags :