அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு தெரிவித்துள்ளது. வரும் தமிழ் புத்தாண்டு அன்று ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள். அன்று சென்னை ஆர்.ஏ..புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய, அனுமதி வேண்டி.. பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவிடக்கோரி, இந்து மக்கள் கட்சி சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கடந்த காலங்களில் மனுதாரர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்ற பொழுது, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இதற்கு முன்பு அளித்த உத்தரவாதத்தை போல மீண்டும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், எங்கள் மக்கள் கட்சியின் சார்பில், பிறரை பற்றிய கோஷங்களோ, வாத்தியங்களோ, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறு செய்ய மாட்டோம் என்றும் அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனம்,பொட்டு விபூதி போன்றவற்றை அனுபவிக்க மாட்டோம் என்றும் காவல்துறை வாகனத்தில் சென்று மாலை அணிவித்து திரும்புவோம் என்றும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நீதிபதி ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து நான்கு முப்பதுக்குள் 9 பேர் மட்டுமே சென்று காவல்துறையின் வாகனத்தில் சென்று மாலை அணிவித்து வருவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Tags :