கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடைசெய்ய எம்.எல்.ஏ.கோரிக்கை

by Editor / 12-04-2023 10:08:37pm
கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடைசெய்ய எம்.எல்.ஏ.கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகள் இல்லை. அங்குள்ள பூகோள அமைப்பின்படி சாலைகளனைத்தும் குறுகலாக உள்ளன. மேலும்,  மழை அதிகம் பெய்து வருவதால் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன.
இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு அதி கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிம வளங்களான கல்,  ஜல்லி,  எம் சாண்ட் போன்றவை பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் குவாரிகள் தடை செய்யப்பட்டதால்  தேவை அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதிகளாகிய நெல்லை,  குமரி மாவட்டங்களில் சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளதாலும்,  பொதுமக்கள் மத்தியில் கேரளாவிற்கு  கொண்டு செல்லப்படுவது மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சாலைகளில் அதிக கனரக வாகனங்களில் பாரம் ஏற்றிச் செல்வதால் சாலைகள் பழுதடைவதும்,  விபத்துக்கள் நிகழ்வதும் அன்றாடம் நடக்கிறது. இதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் பல வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாலும் கல்,  மணல், எம் சாண்ட், பி  சாண்ட் போன்றவை தேவைப்படுகிறது. எனவே,  இந்த இக்கட்டண சூழலை கருத்தில் கொண்டு,  அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து,  ஆற்று  மணல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடை செய்யவும்,  குமரி மாவட்டத்தின் தேவைகளுக்கு,  விதிமுறைக் குட்பட்டு குவாரிகள் இயங்க அனுமதிக்குமாறு பணிவுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். என பேசினார்.

 

Tags :

Share via