கடையநல்லூர் அருகே பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸார் விசாரணை
கடையநல்லூர் அருகே பெண் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரம்யாபாரதி(27). இவருக்கும் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த ஸ்ரீகுமாருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரம்யாபாரதி சில தினங்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இந்நிலையில் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு ரம்யாபாரதியை அவரது உறவினர்கள் நேற்று அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனராம்.
இதைத் தொடர்ந்து கடையநல்லூர் போலீஸார் ரம்யா பாரதியின் மரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆனதால் தென்காசி கோட்டாட்சியர் கங்காதேவி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags :