நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.

by Editor / 12-04-2023 09:19:54pm
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.

 நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடக்கிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 6ல் துவங்கியது; ஏப். 6 வரை நடந்தது. தமிழகத்தில் இருந்து 1.05 லட்சம் பேர் உட்பட நாடு முழுதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.இந்நிலையில் மாணவர் நலன் கருதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 13ம் தேதி இரவு 11:30 மணி வரை தேசிய தேர்வுகள் முகமை அவகாசம் நீட்டித்து உள்ளது.

 

Tags :

Share via