புதுச்சோிக்கு நூறு சதவிகிதம் போராடி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம்-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 

by Admin / 05-04-2026 02:08:00am
 புதுச்சோிக்கு நூறு சதவிகிதம் போராடி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம்-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்று தர 100% சட்டப்படி போராடுவோம் என்றும் துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவதே தனது கட்சியின் இலக்கு என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி புதுச்சேரி தட்டாஞ்சாவடி பரப்புரை கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி...கூட்டத்தில் உறுதி அளித்தார்.

த வெ க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்

 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகை 25000 ஆக உயர்த்தப்படும்

 ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சத்திற்கும் மதிப்பிலான விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்

 குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்

 அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும்

 மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு இருபது ரூபாய் மானியம் வழங்கப்படும்

 விவசாயிகளுக்கு 100% பயிர் காப்பீடு உறுதி செய்யப்படும்

புதுச்சேரியில் பயன்பாட்டு அறிவியல் மற்றும் கலைகளுக்கான மாநில பல்கலைக்கழகம் நிறுவப்படும்

என்றும் தெரிவித்தார்.

அத்துடன், புதுச்சேரியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளை சோர்வடைந்த கூட்டணி என்றும் குழப்பமான கூட்டணி என்றும் விமர்சித்து தமிழக வெற்றிக்கழகம் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

 புதுச்சோிக்கு நூறு சதவிகிதம் போராடி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம்-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 
 

Tags :

Share via

More stories

Logo