கடற்கரையில் கரை அரிப்பு விநாயகரிடம் வேண்டிய இந்து முன்னணி.

திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடற்கரையில் சுமார் 7 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை காத்திட நெல்லை கோட்ட இந்து முன்னணியின் சார்பில் கடற்கரை வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.காவல்துறையின் அனுமதி மறுத்துவிட்ட காரணத்தினால் கோவில் அருகே உள்ள தூண்டுகை விநாயகர் கோவில் முன் விநாயகர் அகவல் பாராயணம் மற்றும் சூடம் ஏற்றி இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகரிடம் வழிபாடு செய்தனர்.
Tags : கடற்கரையில் கரை அரிப்பு விநாயகரிடம் வேண்டிய இந்து முன்னணி.