கட்சி விரோத செயல்: 4 நிர்வாகிகள் நீக்கம் எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

கட்சி விரோத செயலில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளரை எதிர்த்துப்போட்டியிடுதல் மற்றும் அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தினாலும்,
சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் பி.ஜி.சீனிவாசன், சேலத்தாம்பட்டி ஊராட்சி காட்டுவளவு கிளைக்கழக செயலாளர் வி.சேகர், 9-வது வார்டு பாசறை செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் சேலத்தாம்பட்டியை சேர்ந்த பி.ஜி.எஸ். அறிவரசன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.
Tags :