மும்பை விமான நிலையம் அருகே நாற்பத்தி எட்டு அடுக்கு மாடி கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை விமான நிலையம் அருகே உள்ள நாற்பத்தி எட்டு உயரமான கட்டிடங்களின் மேல் மாடிகளில் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான திட்டத்தை தயாரித்து வருமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடங்களின் சில பகுதிகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி கட்டப்பட்ட 61 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் இந்த உயரமான கட்டடங்கள் விமானங்கள் தரையிறக்கம் வானத்தில் பறக்க செய்யவும் இடர் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 48 கட்டடங்களை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Tags :