அ.தி.மு.க கூட்டணியை அண்ணாமலை விரும்பினார் -பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீநிவாசன்

அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பினார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீநிவாசன் பரபரப்பு பேட்டி. மேலும் அவர், பாஜக தலைமையின் கோரிக்கையை கூட பிடிவாதமாக நிராகரித்தது எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமிக்கு தவறான ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் இருந்திருந்தால் இன்று இந்தியாவில் பெரிய சக்தியாக எடப்பாடி இருந்திருப்பார். பாஜகவின் ஆதரவால்தான் அதிமுக 5 ஆண்டு ஆட்சி நடத்தியது. சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என நினைத்து கூட்டணியை முறித்தனர், ஆனால் அது நடக்கவில்லை" என கூறியுள்ளார்.
Tags :