புதுப்பெண் தற்கொலை

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் புதுப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். செலியா பகுதியைச் சேர்ந்த அர்த்ரா (24) என்பவர் உயிரிழந்தார். கோழிக்கோடு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு பிப்., 2ஆம் தேதி திருமணம் நடந்தது. நேற்றிரவு குளிக்கச் சென்ற அர்த்ரா, ஒரு மணி நேரம் ஆகியும் வராததால், அவரது கணவர் ஷான் சென்று பார்த்தார். அப்போது கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
Tags :