எடப்பாடிபழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கும்மி அடித்து நன்றியை தெரிவித்தவிவசாயிகள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி அருகே உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கசப்பு ஏரி வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அப்பகுதி விவசாயிகளையும் பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை கொண்டாடும் வகையில் அப்பகுதி விவசாயிகள் கிடா வெட்டி பொங்கல் வைத்து படையல் இட்டு மலர் தூவி தண்ணீரை வரவேற்று வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை உருவாக்கிய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு அப்பகுதி பெண்கள் மற்றும் விவசாயிகள் கும்மி அடித்து இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று மகிழ்ச்சியையும் தங்களது நன்றியையும் தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பலரும் உடன் இருந்தனர்.
Tags : எடப்பாடிபழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கும்மி அடித்து நன்றியை தெரிவித்தவிவசாயிகள்