ஜம்மு காஷ்மீரின் சமோல் கிராமத்தில் மழையால் நிலச்சரிவு மண் வீடு இடிந்து 2 குழந்தைகள் பலி

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் அருகே சமோல் என்ற கிராமத்தில் வீடு இடிந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.பில்லா என்பவரின், ஆரிப் என்ற 3 வயது மகனும், 2 மாத ஆண் குழந்தை கணியும் உடல் நசுங்கி பலியாகினர். இந்த சம்பவம் நடந்தபோது, பெற்றோர் வெளியே இருந்த அறையில் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது உள் அறையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குழந்தைகளின் உடல்களை மீட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Tags :