போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை ஆளுநர்

by Staff / 11-02-2023 04:45:53pm
போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை ஆளுநர்

கோவை சித்ரா பகுதியில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் 35 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றதும் பதக்கங்கள் பெற்றதும் பெருமைக்குரிய விஷயமாகும். நமது நாட்டின் வளர்ச்சியின் முக்கியமான காலத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இதை எண்ணி மாணவர்கள் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்த புதிய இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தனது பங்கினை செலுத்த வேண்டும்.

உறுதியான திறன்மிக்க அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியா தற்போது உருவாக்கி வருகிறது. உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலக அளவில் அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ள நாடாக இந்தியா உள்ளது.  முன்பு வெறும் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இருந்த நிலையில், தற்போது 90,000 மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளனர். இவை அனைத்தும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிர்வாக காரணத்திற்காக இந்தியா பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் நாம் அதையே பின்பற்றி வந்தோம். ஆனால், இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி காலத்தில் மொத்த இந்தியாவும் ஒரே குடும்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைந்துள்ளது.  குறிப்பாக தமிழ்நாடு முன்பு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என வளர்ச்சி விகிதத்தில் சமநிலை இன்றி இருந்தது. ஆனால் இப்போது அனைத்து பகுதிகளுக்குமான சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இதனால் கடந்த எட்டு ஆண்டுகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் கேஸ் எரிவாயு சமையலுக்கான கேஸ் எரிவாயு சேவை சென்றடைந்துள்ளது. வளர்ச்சிக்காக மக்கள் அரசை எதிர்பார்த்து இருந்த நிலை மாறி, அரசு நிர்வாகம் மக்களை நம்பி மக்களின் சக்தியை நம்பி மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக உருவாக உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியாகவே பார்க்கின்றனர். எந்த ஒரு பகுதியையும் பின்னுக்கு தள்ளாமல் அனைவருக்குமான வளர்ச்சியை இந்தியா கொடுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இன்றைய போட்டிகளையும் வருங்காலத்தில் ஏற்படும் போட்டி சூழலையும் எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது

அதனை சீக்கிரமாக கல்வி நிறுவனங்கள் அமல்படுத்தி இளைஞர்களை வெறும் காகிதம் பெற்ற பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், எந்த ஒரு வேலைக்கும் தகுதியான பட்டதாரியாக அவர்களை உருவாக்க வேண்டும். புதிய பொருட்களை கண்டுபிடிப்பது, புதிய விஷயங்களை உருவாக்குவது போன்ற செயல்களில் கல்வி நிறுவனங்களும் இளைஞர்களும் ஈடுபட வேண்டும். இவையே இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

 

Tags :

Share via