ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையை அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கட்டும் என ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சிங்கம் என்ற பெயரில், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம நட்சத்திரத்தில் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை இன்று (செப். 15) கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகெங்கிலும் உள்ள எனது மலையாள சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள்! பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையை அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கட்டும்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Tags : ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து