இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.

by Editor / 24-10-2023 08:57:35am
இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.

இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என - தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு. வெளியிட்டுள்ளது.4 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்தஊர்களுக்கு வந்துவிட்டு விடுமுறை  முடிந்து ஊர் திரும்ப முன்பதிவு செய்துள்ள 1 லட்சம் பயணிகள் இன்று முதல் சென்னை,கோவை,பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல உள்ள நிலையில் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு  அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்ததற்கு எதிராக 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு கைப்பற்றி சிறைபிடித்துள்ளனர்.

கூடுதல் கட்டணம் வாங்கியது, அதிக பயணிகளை ஏற்றியது, கமிஷன் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதோடு இல்லாமல் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
 

 

Tags : இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.

Share via

More stories

Logo