திருத்தணி முருகன் கோவிலில் கோபுர உச்சியில் உள்ள சுதை சிற்பங்கள் உடைந்து விழுந்ததின் மூன்று பெண்கள் உட்பட நாலு பக்தர்கள் காயம்

by Admin / 05-10-2026 12:34:31am
 திருத்தணி முருகன் கோவிலில்  கோபுர உச்சியில் உள்ள சுதை சிற்பங்கள் உடைந்து விழுந்ததின் மூன்று பெண்கள் உட்பட நாலு பக்தர்கள் காயம்

 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பொது வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் மீது கோபுர உச்சியில் உள்ள சுதை சிற்பங்கள் உடைந்து விழுந்ததின் மூன்று பெண்கள் உட்பட நாலு பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர் . தர்மபுரியைச் சேர்ந்த லட்சுமி, ஜெயா , திருப்பதியைச் சேர்ந்த சாவித்திரி, மணிகண்டன் ஆகிய நான்கு பேர் விபத்தில் தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் குறித்து  தீவிரண விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில்,கோவில் நிர்வாகம் சார்பாக எந்த விதமான உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo