ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி மாணவ- மாணவியர்கள் உயிர் இழப்பு.

by Admin / 05-10-2026 12:29:09am
ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி மாணவ- மாணவியர்கள்  உயிர் இழப்பு.

 நாளை பள்ளி திறக்கும் நிலையில் விடுமுறை கடைசி நாளான இன்று குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாடச் செல்வதாக சொல்லிச் சென்ற பூஜா, குஷி, தேவதர்ஷன், யுவனேஷ் ஆகிய நான்கு சிறுவர் சிறுமிகளும் இரவு வரை வீடு திரும்பாததால், பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி இறுதியில் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்., இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருநீர்மலை பெரிய ஏரியில் நான்கு பேரில் உடல்களும் விதைப்பதை கண்டு பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் உதவியோடு ஏரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன..திருநீர்மலை ஏரியில் குளிக்க சென்ற பொழுது சேற்றில் சிக்கி உயிர் இழந்திருக்கலாம் என்று காவல் தரப்பு தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo