இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கர்னுடன் பிரான்ஸ் நைஸ் நகரில் இருதரப்பு உயர்மட்ட குழு பேச்சு வார்த்தை
இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கர்னுடன் பிரான்ஸ் நைஸ் நகரில் இருதரப்பு உயர்மட்ட குழு பேச்சு வார்த்தையை நடத்தினார். இரு நாட்டு தலைவர்களின் தலைமையில் பாதுகாப்பு வெளியுறவு விண்வெளி மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்தியா பிரான்ஸ் இடையேயான கூட்டுறவை உலகளாவிய நன்மைக்கான ஒரு சக்தியாக மாற்றுவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததோடு வர்த்தகம், சிவில் விமான போக்குவரத்து ,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு தயாரிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பின்போது பாரத் இன்னோவேட்ஸ் என்ற புதிய கூட்டத்திட்டத்தை தொடங்கி வைத்து இந்தியா-,பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைத்து தொழில்நுட்ப ஈகோசிஸ்டம்களை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு நிகழ்வு நடைபெற்றது.
Tags :



















