இரு நாடுகளும் ஒரு சிறப்பான உறவை கொண்டுள்ளன - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்க அதிபர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை ஒரு குற்றச்சாட்டாக சுமத்தியிருந்த நிலையில் தற்பொழுது இந்தியா மீது ஒரு மென்மையான போக்கை அவர் கடைபிடிக்க தொடங்கியுள்ளார். அவர் இரு நாடுகளும் ஒரு சிறப்பான உறவை கொண்டுள்ளன என்றும் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன் நான் எப்பொழுதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் என்றும் அவர் ஒரு சிறந்த பிரதமர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தம் கருத்தை பதிந்ததும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நமது உறவுகள் குறித்த அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பெட்டையும் ஆழமாக பாராட்டுகிறோம் என்றும் முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம் என்றும் இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட விரிவான மற்றும் உலகளாவிய கூட்டான்மையை கொண்டுள்ளன என்றும் பதிவிட்டு இருந்தார்.
Tags :