பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்..!!
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக அமைய கூடும் என உலக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனை தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் உறுதி செய்துள்ளார்.
மேலும் தாலிபான்களுடன் இணக்கமாகச் செல்ல இம்ரான் கான் அரசு விரும்புவதாக அவர் கூறியுள்ளார். முல்லா பராதார் மற்றும் தாலிபானின் முக்கிய அதிகாரிகள் பலர் பாகிஸ்தானுடன் கத்தாரில் உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :