நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல் பாதிப்புநிவாரண நிதி ரூ.10 லட்சம்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர்.
மேலும் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. விழுப்புரம் முழுவதும் கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியது. வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்டுப் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டத்திலிருந்து தன்னார்வலர்கள் அந்தந்த பகுதிஅரசு அலுவலகங்கள் மூலமாக நிவாரணப்பொருட்களைவழங்கிவருகின்றனர்.இதன் ஒருபகுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
Tags : நடிகர் சிவகார்த்திகேயன்