சென்னையில் நேற்றிலிருந்து விடாமல் தொடர் மழை பொழிந்து வருகிறது.
சென்னையில் நேற்றிலிருந்து விடாமல் தொடர் மழை பொழிந்து வருவதின் காரணமாக நகரம் முழுவதும் பல்வேறு முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த டிட்வா புயல் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறிய நிலையில் மழை விடாமல் செய்து வருகிறது. பாதுகாப்பு கருதி சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஊழியர்கள் தெருவில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :



















