தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக குமரி மாவட்டம் செல்கிறார்.

by Editor / 23-11-2021 08:47:16pm
 தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  2 நாள் பயணமாக  குமரி மாவட்டம் செல்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  2 நாள் பயணமாக  குமரி மாவட்டம் செல்லும் அவர்  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்லும் ஆளுநர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் பகவதி அம்மன் கோவில், ராமாயண சித்திரகூடம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.இதனை தொடர்ந்து 25-ந்தேதி மாலை அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். ஆளுனரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ஆர்.என்.ரவி
முதல் முறையாக கன்னியாகுமரிக்கு செல்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு பணி தொடர்பாக மாவட்ட போலீஸ் காவல்துறை கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories