கோர விபத்து.. தீ பிடித்து எரிந்த லாரி

by Staff / 26-03-2023 04:21:05pm
கோர விபத்து.. தீ பிடித்து எரிந்த லாரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோபோலி அருகே புனே-மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, லாரியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்நிலையில், லாரியில் இருந்தவர்கள் வெளியே குதித்து உயிரை காப்பாற்றினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில் அதிவேகமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories