நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

by Editor / 31-07-2022 05:00:48pm
நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த மாணவி நேற்று விடுதியை காலி செய்துவிட்டு வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வந்து செல்ல முடிவு செய்து இருப்பதாக தெரியவந்து உள்ளது. அதன் அடிப்படையில் சக மாணவிகள் கல்லூரி நிர்வாக பெற்றோர் உள்ளிட்டோரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மாணவி செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார்  எனவும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

 

Tags :

Share via

More stories