அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

by Editor / 31-07-2022 05:04:15pm
அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் சென்ற கார் நள்ளிரவில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. கடந்த 27ஆம் தேதி சென்னை வருவதாக எம்எல்ஏ வெங்கடாச்சலம் தனது காரில் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் மற்றொரு நபருடன் ஈரோடு ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வாய்க்கால் பாளையம்  என்ற இடத்தில் வந்தபோது மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வளைவில் திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் எம்எல்ஏ வெங்கடாசலபதிக்கு விலா எலும்பு தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories