இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்-அ. ம. மு .க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் சந்திக்க உள்ளனர்.

by Admin / 21-03-2026 12:07:54pm
இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்-அ. ம. மு .க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் சந்திக்க உள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் சந்திக்க உள்ளனர். .தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய டி.டி.வி தினகரன் தாங்கள் என். டி .ஏ. கூட்டணியில் அங்கமாக இருப்பதாகவும் அமீத்ஷாவின் அழைப்பின் பேரிலேயே டெல்லி செல்வதாகவும் தெரிவித்தார் .மேலும் அ.ம.மு.க குக்கர் சின்னத்திலேயே  போட்டியிடும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பாமக தரப்பில் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரின் சந்திப்பிற்கு பிறகு தொகுதி பங்கீடு உடன்பாடு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்று தெரிகிறது. மத்தியஅமைச்சரும்பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னை வருவதாக இருந்த நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .என். டி .ஏ கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டால் ,வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via