உச்சநீதிமன்றத்தில் இனி நேரடி விசாரணை... செப்டம்பர் 1 முதல் தொடங்குகிறது...

by Admin / 30-08-2021 01:28:08pm
உச்சநீதிமன்றத்தில் இனி நேரடி விசாரணை... செப்டம்பர் 1 முதல் தொடங்குகிறது...



உச்சநீதிமன்றம், 17 மாதங்களுக்கு பின், வருகிற செப்டம்பர் மாதம் முதல் வழக்கு விசாரணையை நேரில் நடத்தவுள்ளது.

 கொரோனா பரவலை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணை  காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதால், மாநிலங்கள் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகின்றன.

இந்நிலையில், உச்சநீதிமன்றம்  விசாரணையையும் மீண்டும் நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இறுதி விசாரணை மற்றும் வழக்கமான விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள் நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ வாதத்தில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் வழக்கு விசாரணையில் கலந்து கொள்வோர் மத்திய அரசின்  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்குகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories