தனியார் மனநல காப்பகத்தில் இருந்து 12 பெண்கள் உட்பட 25 பேர் மீட்பு

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதியில் இயங்கி வந்த அன்பு ஜோதி அறக்கட்டளையில் மற்றொரு கிளை இயங்கி வருகிறது இங்கு விழுப்புரத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து மனநலம் குன்றிய ஒரு பெண்ணை அழைத்து வந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அதிகாரிகள் இன்று சின்ன முதலியார் சாவடி பகுதியில் உள்ள காப்பகத்தை ஆய்வு செய்தனர் மேலும் ஆய்வின்போது இந்த காப்பகமும் உரிய அனுமதி பெறாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அங்கிருந்த 13 பெண்கள் உட்பட வடமாநிலத்தவர்கள் சேர்த்து 25 பேரை பத்திரமாக மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
உரிய அனுமதி பெறாமல் மனநலம் குன்றியவர்களை அடிப்படை வசதி இல்லாமல் வைத்து துன்புறுத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : தனியார் மனநல காப்பகத்தில் இருந்து 12 பெண்கள் உட்பட 25 பேர் மீட்பு