2026 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்-இ.யூ.மு.லீக் தலைவர் காதர் மொய்தீன்.
திருச்சியில் புதன்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கைக்கு இந்திய அரசு உதவி வருகிறது. தமிழக மீனவர்களை காக்க புதிய திட்டத்தை அமல்படுத்தி, கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்க வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. வரவிருக்கும் 2026சட்டமன்ற தேர்தலில் திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
Tags : 2026 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்-இ.யூ.மு.லீக் தலைவர் காதர் மொய்தீன்.



















