பூத் ஸ்லிப் கொண்டு வாக்களிக்க முடியாது . 12 ,அடையாள ஆவணங்களில், ஏதாவது ஒன்றை ஆவணமாக சமர்ப்பித்தால் வாக்கு செலுத்த முடியும்

by Admin / 19-03-2026 02:09:10am
பூத் ஸ்லிப் கொண்டு  வாக்களிக்க முடியாது . 12 ,அடையாள ஆவணங்களில், ஏதாவது ஒன்றை ஆவணமாக சமர்ப்பித்தால் வாக்கு செலுத்த முடியும்

தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்கு செலுத்தும் ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படாது என்கிற அறிவிப்பை செய்துள்ளது. வாக்கு சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு அல்லது பூத் ஸ்லிப் என்பது தகவலுக்காக மட்டுமே. இதை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரால் வாக்களிக்க முடியாது என்றும் வாக்குச்சாவடியில் உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாகும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ள 12 அடையாள ஆவணங்கள், 1) வாக்காளர் அடையாள அட்டை

2,ஆதார் அட்டை

3, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள்

4, பான் கார்டு

5, இந்திய கடவுச்சீட்டு,

6, ஓட்டுநர் உரிமம்,

7, மத்திய மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை

8, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட சுமார்ட் கார்டு,

9, தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு

10, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

11, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை

12, மாற்று திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை.

இதில் ஏதாவது ஒன்றை ஆவணமாக சமர்ப்பித்தால் வாக்கு செலுத்த முடியும். வாக் இந்த முறை வாக்காளரின் புகைப்படம் பூத் ஸ்லிப்பில் இடம்பெறாது என்றும் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை கண்டறிய கூடிய தகவல் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அடையாள அட்டை இருந்தாலும் உங்கள் பெயர் அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

 

Tags :

Share via

More stories