மதுரையில்கொலை வழக்கில் பிரபல ரௌடி வெள்ளைகாளியின் தாயார் உட்பட 7 பேர் கைது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி வீ.கே.குருசாமியின் உறவினரான கிளாமர் காளி (எ) காளிஸ்வரன் கொலை வழக்கில் பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் தாயார் உட்பட 7 பேர் கைது.
கிளாமர் காலி கொலை வழக்கில் குள்ள முத்துபாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சரண்டர் ஆன நிலையில் பிரபல ரௌடி வெள்ளைக்காளியின் தாயாரான ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன்குமார், சென்னையை சேர்ந்த கார்த்திக், திருப்பூரை சேர்ந்த அசன் ஆகிய 7 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்ய முயன்றபோது மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தவறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல ரௌடியான வெள்ளைக்காளி சிறையில் இருந்தபடி திட்டம் தீட்டி கிளாமர் காளியை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் வெள்ளைகாளியின் தாயார் ஜெயக்கொடி கூட்டுசதி திட்டமிட்டு கிளாமர் காளியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags : மதுரையில்கொலை வழக்கில் பிரபல ரௌடி வெள்ளைகாளியின் தாயார் உட்பட 7 பேர் கைது.